நேற்று பங்குச் சந்தையின் இறுதி குறியீட்டு எண்ணை கணக்கில் எடுத்துக் கொண்டால், இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிக அளவு மாற்றம் இருக்காது.
நிஃப்டி 5285 க்கும் அதிகரித்தால் மட்டுமே, மேலும் உயரும். இதற்கு மாறாக குறைந்தால் பங்குகளை அதிக அளவு விற்பனை செய்வார்கள். இதனால் நிஃப்டி மேலும் குறையும்.
நிஃப்டி 5300/5345/5400 என்ற அளவுகளில் இருக்கு்ம். 5400 க்கும் மேல் அதிகரித்தால் அதிக அளவு பங்குகளை வாங்குவதை காண முடியம், இதனால் நிஃப்டி மேலும் உயர்ந்து குறைந்த நேரத்திற்கு 5465/5500 என்ற அளவுக்கு உயரும்.
இதற்கு எதிர் மாறாக நிஃப்டி 5250/5215/5180 என்ற அளவுகளில் குறைந்து, 5180 க்கும் குறைந்தால், அதிக அளவு பங்குகளை விற்பனை செய்வார்கள். இதன் காரணமாக நிஃப்டி 5120/5090 என்ற அளவிற்கு குறையும்.
இன்று ஜே.பி.ஹைட்ரோ,டபிள்யூ.டபிள்யூ.ஐ.எல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி,பஜாஜ் ஹிந்த், இஸ்பாட் இன்டஸ்டிரிஸ்,பின்டெக் ஆகிய பங்குகளில் அதிக வர்த்தகம் நடக்கும்.
திங்கட் கிழமை பங்குச் சந்தையில் எவ்வித விறு விறுப்பும் இல்லாமல், குறியீட்டு எண்கள் அதிகம் மாற்றம் இல்லாமல் முடிந்தது. சுமால் கேப் பிரிவில் உள்ள பங்குகளில் ஆர்வம் செலுத்துவதை பார்க்க முடிந்தது.
இதனால் பங்குச் சந்தையில் அதிக பாதிப்பு இல்லை. மற்ற நாடுகளை பொறுத்த அளவில் ஆசிய பங்குச் சந்தைகளில், சில நாடுகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன. சிலவற்றில் அதிகரித்தன. ஐரோப்பிய நாட்டு பங்குச் சந்தைகளில் பங்கு விலைகள் அதிகரித்தன.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, ரிலையன்ஸ் பவர் போனஸ் பங்குகளை கொடுக்க இருப்பதாக செய்தி வந்தது. இதனால் குறியீட்டு எண்கள் அதிகரித்தது. இதை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. மதியத்திற்கு பிறகு சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்கு விலைகள் குறைந்தது. இதனால் குறியீட்டு எண்கள் தொடர்ந்து சரிய ஆரம்பித்தன.
ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளின் முன்னேற்றத்தின் தாக்கம்., இந்திய பங்குச் சந்தையிலும் காணப்பட்டது. இதனால் மீண்டும் பங்கு விலைகள் அதிகரிக்க ஆரம்பித்தன.
போனஸ் பங்கு அறிவிப்பினால் ரிலையன்ஸ் பவர் பங்குகளின் விலை அதிகரித்தது. சர்க்கரை ஆலைகளின் பங்கு விலையும் அதிகரித்தது. சீமென்ஸ்,டிஸ்கோ,டிஸ் டி.வி, டபிள்யூ.டபிள்யூ.ஐ.எல், பஜாஜ் ஹிந்த், ரேணுகா சுகர், மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஐ.டி.சி, ஹிந்துஸ்தான் லீவர், பிரஜா இன்டஸ்டிரிஸ், வெல்கஜ் ஆகிய பங்குகள் அதிக அளவு விற்பனையாயின. நேற்று சுமார் ரூ.48 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடந்தது.