திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் வாழை பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
திண்டுக்கல் அருகே உள்ள நரசிங்கபுரம், வெள்ளோடு, சிறுமலை அடிவாரம், செட்டியபட்டி பகுதிகளில் சுமார் 150 ஏக்கரில் செவ்வாழை பயிரிடப்பட்டுள்ளது. இவை இரண்டு மாதங்களில் அறுவடைக்கு தயாராக செவ்வாழை தார் போட்டு இருந்தன.
இந்நிலையில் திங்கட்கிழமை பலத்த சூறாவளி காற்று அரை மணிநேரம் வீசியது. அத்துடன் ஐஸ்கட்டி மழையும் பெய்தது. இதனால் செவ்வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது.
அத்துடன் திராட்சை பழ தோட்டங்களில் கொடிகளில் இருந்த திராட்சையும் சேதம் அடைந்தது.
இதே போல் சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் திங்கட் கிழமை கனமழை பெய்தது. இதனால் ஓமலூர், இடைப்பாடி பகுதியில் வாழை மரங்கள் சரிந்தன.