வங்கி உள்நாட்டு வங்கியா அல்லது அயல்நாட்டு வங்கியா என்பதை தீர்மானிக்க, அதன் பங்குகளில் முதலீடு செய்யதுள்ள ஏ.டி.ஆர், ஜி.டி.ஆர் களை கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது என்று மத்திய அரசை, ஐ.சி..ஐ.சி.ஐ வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
வங்கிகள் அமெரிக்க பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு முதலீடு திரட்டுகின்றன. இவை அமெரிக்கன் டெபாசிட்டரி ரிசிப்ட் என்று அழைக்கப்படுகிறது. இதே போல் குளோபல் டெபாசிட்டரி ரிசிப்ட் வெளியிட்டு ஐரோப்பா உட்பட பல்வேறு பங்குச் சந்தைகளில் முதலீடு திரட்டுகின்றன. இந்த டெபாசிட்டரி ரிசிப்பட்டுகள் பங்குகளை போலவே, அந்தந்த பங்கு சந்தையில் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுகிறது.
இவ்வாறு டெபாசிட்டரி ரிசிப்படுகளை வெளியிடும் போது, இதற்கு இணையான பங்குகளைவும் அறிவிக்க வேண்டும். இந்த பங்குகள் இந்திய பங்குச் சந்தையில் விற்பனை செய்ய முடியாது.
இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் இயங்கும் வங்கிகளின் முதலீடு அளவை பொறுத்து, அவை உள்நாட்டு வங்கியா அல்லது அயல்நாட்டு வங்கியா என இனம் பிரிப்பதில் ஈடுபட்டுள்ளது.
ஒரு வங்கியின் மொத்த பங்குகளில் அமெரிக்கன் டிபாசிட்டரி ரிசிப்ட், குளோபல் டிபாசிட்டரி ரிசிப்ட்டிற்காக ஒதுக்கியுள்ள பங்குகளையும் அந்நிய முதலீடாக கருதப்படும். அமெரிக்கன் டிபாசிட்டரி ரிசிப்ட், குளோபல் டிபாசிட்டரி ரிசிப்ட், அயல்நாடு நேரடி முதலீடு, அயல்நாட்டு இந்தியர்களின் மூதலீடு, ஆகியவை சேர்த்து மொத்த மூலதனத்தில் 50 விழுக்காடுக்கும் மேல் இருந்தால், அந்த வங்கி அயல்நாட்டு வங்கியாக கருதப்படும் என்று தொழில் துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை அறிவிருத்திருந்தது.
இந்த அறிவிப்பின் படி ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உட்பட சில வங்கிகள் அந்நிய நாட்டு வங்கிகளாக கருதப்படும். இவைகளுக்கும், உள்நாட்டு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியின் கொள்கைள், கட்டுப்பாடுகள் வெவ்வேறானவை.
இந்நிலையில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மேலாண்மை இயக்குநர் சந்திரா கோச்சர், தங்கள் வங்கியை அந்நிய வங்கியாக கருதக் கூடாது. எங்கள் வங்கி இந்தியர்களின் வங்கிதான். இதற்காக நாங்கள் பெருமை கொள்கின்றோம். அந்நிய நாட்டு வங்கியா அல்லது உள்நாட்டு வங்கியா என்பதை இனம் பிரிக்கும் போது, அமெரிக்கன் டிபாசிட்டரி ரிசிப்ட், குளோபல் டிபாசிட்டரி ரிசிப்ட், அயல்நாடு நேரடி முதலீடு, அயல்நாட்டு இந்தியர்களின் மூதலீடு போன்றவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது என்று மத்திய அரசை கோரியுள்ளார்.