லஷ்மி விலாஸ் வங்கி (எல்.வி.பி) உள்நாட்டு வைப்புநிதிக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்துள்ளது.
புதிய டெபாசிட்டுகள் மற்றும் புதுப்பிக்கக்கூடிய டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித மாற்றம் நவம்பர் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தில் மூத்த குடிமக்களுக்கு ஒரு ஆண்டு மற்றும் அதற்கு அதிகமான காலத்திற்கான முதலீட்டிற்கு கூடுதலாக 0.75 விழுக்காடு வட்டி உயர்வு அளிக்கப்படும் என்று லஷ்மி விலாஸ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது.