இறக்குமதி வரியை நீக்க வேண்டும்-இலங்கைக்கு இந்தியா வேண்டுகோள்
, செவ்வாய், 11 டிசம்பர் 2012 (13:22 IST)
இந்தியாவிலிருந்து வரும் கார், பைக் போன்ற ஆட்டோமொபைல் இயந்திரங்களை இலங்கையில் இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசு புதிய சுங்கவரி நிர்ணயித்துள்ளது.இலங்கை புதிதாக விதித்துள்ள இறக்குமதி வரியால் இந்தியாவின் ஆட்டொமொபைல் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது.இது குறித்து வணிகத்துறை அமைச்சகத்தினுடைய கூடுதல் செயலர் ராஜீவ் கெர் தெரிவித்துள்ளதாவது, இறக்குமதி வரியை நீக்க இலங்கை அரசை நேரடியாக வலியுறுத்துவோம் என்று கூறினார்.இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் மிகப்பெரிய சந்தை இலங்கை ஆகும். இந்நிலையில் இலங்கை அரசின் இந்த வருந்தத்தக்க அறிவிப்பு இந்தியாவினுடைய ஏற்றுமதியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ராஜீவ் கெர் தெரிவித்தார்.இலங்கை அரசு சமீபத்தில் இறக்குமதிக்கான சுங்கவரியை 100% உயர்த்தியதால் இந்தியாவினுடைய ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய ஆட்டோமொபைல் வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பினுடைய நிர்வாக இயக்குநர் விஷ்ணு மத்தூர், கடந்த ஆண்டு இந்தியாவினுடைய வாகன ஏற்றுமதியின் மொத்த மதிப்பான 6 பில்லியன் டாலரில் சுமார் 800 மில்லியன் டாலர் மதிப்புக்கு இலங்கையில் விற்பனை செய்யப்பட்டது. அதை நாம் தற்போது இழந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.