Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் வறுமையை ஒழிக்க 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி கடன் -உலக வங்கி ஒப்புதல்!

Advertiesment
உலக வங்கி
, வெள்ளி, 12 ஏப்ரல் 2013 (15:44 IST)
இந்தியாவுக்கு அடுத்த 4 ஆண்டுகள் தோறும் 5 பில்லியன் அதாவது 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கப்படும் என்று உலக வங்கி நேற்று அறிவித்துள்ளது.

இந்த நிதி ஆண்டில் இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களின் வளர்ச்சிக்காக தீட்டப்பட்ட 4 ஆண்டு திட்டங்களுக்கு இந்த பணம் பயன்படுத்தப்பட உள்ளது. பணத்தில் 60% அரசாங்க திட்டதில் சேர நிதிதுறைக்கும், 30% ஏழை மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் உலக நாடுகள் வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஏழ்மையை உலகத்தை விட்டு விரட்ட வேண்டும் என்று உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் கேட்டுக்கொண்டார்.

இந்த கடனைக் கொண்டு இந்தியாவில் ஏழைகளில் 5.5 சதவீதம் பேரை 2030-ம் ஆண்டுக்குள் வறுமையிலிருந்து மீட்க உலக வங்கி திட்டமிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil