Publish Date: Tue, 22 Jul 2008 (13:05 IST)
Updated Date: Tue, 22 Jul 2008 (13:05 IST)
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி எல்லா ஏகாதசிகளை விடவும் மிக முக்கியமானதாகும். இதனைத்தான் வைகுண்ட ஏகாதசி என அழைக்கிறோம்.
ஏகாதசி அன்று முழுவதும் (பால், பழம் மட்டும் உண்ணலாம்) விரதமிருந்து, இரவு கண் விழித்து வைகுண்டம் பற்றிய விஷ்ணுவின் புராணங்களைப் படிக்க வேண்டும்.
அன்றைய தினம் பெருமாள் கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசிப்பதும் சிறந்தது.
மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு பச்சரிசி அன்னமும், அகத்திக்கீரை, நெல்லிக்காய் சேர்த்து உணவு உண்ணலாம்.