சேமியா பாயசம், அவல் பாயசம் எல்லாம் பழையது. சோயா பாயசம் செய்து பார்ப்போமே.
தேவையானப் பொருட்கள்
பால் - 1 லிட்டர்
ஏலக்காய்
சர்க்கரை-1 கப்
சோயா - 200 கிராம்
பாதம்
முந்திரி
செய்முறை
1 லிட்டர் பாலை 1/2 லிட்டராக சுண்டக் காய்ச்சவும். அதே சமயத்தில் சோயாவை சிறு சிறு உருண்டைகளாக ஆக்கி டால்டாவில் போட்டு பொரிக்கவும்.
சுண்டக் காய்ச்சிய பாலில் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையைப் போட்டு கிளறவும். பின்னர் சோயா உருண்டைகளைப் போடவும். சோயா உருண்டைகளைப் போட்டு 10 நிமிட நேரம் கழித்து இறக்கவும்.
சுவையான சோயா பாயசம் ரெடி.