Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியின் அருளை பெற அனுஷ்டிக்கப்படும் வரலட்சுமி விரதம்!!

செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியின் அருளை பெற அனுஷ்டிக்கப்படும் வரலட்சுமி விரதம்!!
இன்று வரலட்சுமி விரதமாகும். ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை அன்று,  வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படும். வரலட்சுமி விரதம் என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின்  அருள் வேண்டி இந்து பெண்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

 
சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், தங்களின் குடும்பங்கள் செல்வ, செழிப்போடு இருக்கவும்,  கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தினை மேற்கொள்வது வழக்கம்.  திருமணம் ஆகாதவர்கள் இதனைக் கடைபிடிக்க விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை. வரலட்சுமி விரத  நாளன்று தான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
 
விரத முறைகள்:
 
வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்  பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும். விநாயகர் பூஜையை நடத்த வேண்டும்.  அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.
 
ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல்,  பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப் பொருட்களை  கலசம் முன் வைக்க வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்களையும், பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம்.
 
அதன்பிறகு வாசலில் உள் நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள்  வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும்.
 
இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும். அப்போது  மங்களகரமான தோத்திரங்களை சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம். இதையடுத்து நோன்புக் கயிறை  கும்பத்தை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லலாம்.
 
பூஜையை நிறைவு செய்து, குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம்  பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜை செய்து மகாலட்சுமியின் பரிபூரண  அருளை பெற்றுடுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த விரலால் விபூதியை தொடுவது நன்மை தரும்!