Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்க சிறந்தது என குறிப்பிட காரணம் என்ன....!

Advertiesment
அட்சய திரிதி
, செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (17:37 IST)
அட்சய திரிதியை நாள் இந்தியாவில் தங்கம் வாங்க மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி  திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை.சயம் என்றால் தேய்தல் என்று பொருள். 
அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக்  கொண்டாடினர்.
 
சித்திரை மாத வளர்பிறை காலத்தில் 3ம் பிறை தோன்றும் நாள்தான் அட்சய திரிதியை' நாள் என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சந்திரனும், சூரியனும் உச்சம் பெற்று இருக்கும். அட்சய திரிதியை தினத்தில் தான் திருமாலின் 6-வது அவதாரமாகிய பரசுராமன் அவதரித்ததாகவும், சொர்க்கத்தில் இருந்து கங்கை  பூமிக்கு வந்த தினமாகவும், திரேதா யுகத்தின் தொடக்கம் அட்சய தினத்தில்தான் வந்ததாகவும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. 
 
அட்சய திரிதியை அன்று தங்கம், வெள்ளி, நிலம் உள்பட ஏதாவது ஒன்றை வாங்கினால் அது பல மடங்காக பெருகி செல்வம் கொழிக்கும் என்று நம்பப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அவதாரமாக விளங்கும் துளசி