Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவபெருமான் காமதேவனை எரித்த தினம் ஹோலி

சிவபெருமான் காமதேவனை எரித்த தினம் ஹோலி
ஹோலி பண்டிகை ​பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வரும் முழு நிலவன்று (பெளர்ணமி) உலகமெங்குமுள்ள வட இந்திய இந்துக்களால் விமர்சையாக  கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் வட மாநிலங்களில் வண்ணமயமான ஹோலி பெருநாள் கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலம். சாலைகள் எங்கும் குழைத்து வைத்த வண்ணத்தை வாரி இறைத்து,  பார்ப்பவர்களின் முகங்களில் சரிசமமாகப் பூசி மகிழும் புதுமையான திருவிழா இது.
 
அறுவடையைக் கொண்டாடடுவதோடு, அடுத்து வரும் வசந்த காலத்தில் இயற்கை வளம் செழிப்பாக இருந்து மனிதர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே  இந்தப் பண்டிகையின் நோக்கம். அதற்காகத்தான் வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றொருவர் மீது வாரி இறைத்துக்கொண்டு, மகிழ்ச்சியைப்  பரிமாறிக்கொள்கிறார்கள்.
 
சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணை திறந்து காமதேவனை எரித்தது ஹோலியன்று என்று நம்பபடுகிறது. அதனால்,மக்கள் ஹோலி-நாளில் மாம்பழ  பூக்கள் மற்றும் சந்தன பசை கலவையை சார்த்தி காமதேவன் வழிபாடு நடத்துகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான சீரக சம்பா சிக்கன் பிரியாணி செய்ய....!