ஹோலி ஸ்பெஷல் ; ஜி்ல் ஜில் தண்டை
, சனி, 24 பிப்ரவரி 2018 (15:10 IST)
ஹோலி ஸ்பெஷல் ; ஜி்ல் ஜில் தண்டை
தேவையானவை:
. ¼ ரோஜா இதழ்கள்
· 1 கப் பால்
· ½ ஸ்பூன் பன்னீர்
· 1 ½ தண்ணீர்
· 1 ஸ்பூன் பாதாம்
· 1 ஸ்பூன் காய்ந்த தர்பூசனி விதை
· ½ ஸ்பூன் ஏலக்காய் பொடி
· 1 ஸ்பூன் மிளகு
· 1 ½ கிலோ சர்க்கரை
· 1 ½ ஸ்பூன் கச கசா
· ½ ஸ்பூன் சீரகம்
பாரம்பரிய ஹோலி பண்டிகையில் செய்யப்படும் ஒரு வித பானம் தான் இந்த 'தண்டை'. உடலுக்கு குள்ர்ச்சி தரும் இந்த குளிர் பானம் சோர்வை நீக்கி உறசாகம் தரும். விழாக்காலங்களில் வெளியில் விற்கும் தரமற்ற குளிர்பானங்களை வாங்கி பருகுவதை விட நம் பாரம்பரிய சில உணவுகளை செய்து உறவுகளுக்கு அளிப்பதே ஒருவித உற்சாகம் தான்.
அரை லிட்டர் தண்ணீரில் ஒன்றரை கிலோ சர்க்கரை சேர்த்து தனியாக வைக்கவும். பின்னர் பன்னீரில் ரோஜா இதழ்கள், காய்ந்த தர்பூசனி விதை, பாதாம் ,மிளகு ,சீரகம் ,கச கசா ஆகியவற்றை உறவைக்கவும். பின்னர் இதனை நன்கு அரைத்து கொள்ளவும். நீரில்லாமல் அதனை வடித்து ஏலக்காய் பொடி சேர்த்து கிளரவும். இந்த மாவை அரை லிட்டர் சர்க்கரை தண்ணீர்ல் கலந்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பரிமாறவும்.
அடுத்த கட்டுரையில்