Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விநாயகர் எலியை வாகனமாக கொண்டிருப்பது ஏன் தெரியுமா...?

விநாயகர் எலியை வாகனமாக கொண்டிருப்பது ஏன் தெரியுமா...?
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மிகப் பெரிய தொல்லைகள் கொடுத்தவன் கஜமுகாசுரன். அவனை எப்படியாகிலும் ஒழித்துவிடும்படி பிள்ளையாரை வேண்டினான்  இந்திரன்.

கணபதியும் அவர்களுடைய வேண்டுக்கோளுக்கிணங்க அவனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். கடுமையான சண்டையில் விநாயகப் பெருமான், தனது ஒரு  தந்தத்தை ஒடித்து கஜமுகாசுரன் மீது எறிந்தார். கீழே விழுந்து இறந்தவன் போல நடித்த அவன், திடீரெனப் பெருச்சாளி ரூபம் எடுத்து கணேசர் மீது பாய்ந்தான். 
 
பிளையார் அவன் மீது தாவி ஏறி அமர்ந்தார். இனி எப்போதும் இதுபோலவே என்னைச் சுமக்கக்கடவாயாக என்றும் ‘ஆசிர்வதித்தார்’. இந்த விநாயகர் “கலங்காமல் காத்த விநாயகர்” என்ற பெயருடன் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் அருள் பாலித்து வருகின்றார்.
 
மிகப்பெரிய யானையின் முகமுள்ள விநாயகர் மிகச்சிறிய பெருச்சாளியை வாகனமாகக் கொண்டிருப்பது அவரே எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளார் என்பதை  எடுத்துக்காட்டுகிறது.
 
பெருச்சாளி இருளை விரும்பும். கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும். எனவே அது அறியாமையையும் ஆணவத்தையும் குறிக்கிறது. ஆகவே பெருச்சாளியை பிள்ளையார் தமது காலின் கீழ் கொண்டிருப்பதன் அர்த்தம், அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை புலப்படுத்தவே கணபதி  பெருச்சாளியை வாகனமாக கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (22-08-2020)!