Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹோலி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா....?

ஹோலி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா....?
ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.
பொதுவாக பனி காலத்திலிருந்து வெயில் காலம் மாறுவதை வசந்த காலம் என்பர். இந்த வசந்த காலத்தில் நச்சுயிரி சார்ந்த காய்ச்சல் சளியும் ஏற்படும். இதனை எதிர்கொள்ளும் விதமாக, ஹோலி பண்டிகை அன்று இயற்கையான வண்ணம் நிறைந்த தூள்களை ஏறிந்து  விளையாடுகின்றனர்.
 
வட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி, இந்த  விழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள். ஹோலி பண்டிகையண்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கலர் பொடிகளைத் தூவியும் திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
 
ஹோலி பண்டிகையின்போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து அனைவரும் ஒன்று என்ற மகத்துவம் ஓங்கி நிற்பது விழாவின்  சிறப்பு.
 
ஹோலிக்கு முதல் நாள் ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைப்பெறும் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது.
 
ஹோலிகா தகனமானதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்றெழுந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும்  மகிழ்விப்பதாக ஐதீகம்.
 
இந்த வண்ணங்கள் ஆயிர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், போன்றவற்றால் செய்யபடுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. ஆனால், நாளடைவில் வியாபாரம் நோக்கத்திற்காக வணிகர்கள் சாயம் கலந்த செயற்கை வண்ணங்களை அதிகமாகப்  விற்று வருகின்றனர்.
 
இதனால் சுற்றுசுழல், உடல்நலத்திற்கு கேடு ஏற்படுகிறது. அதனால் மக்கள் அனைவரும் இயற்கையான வண்ண பொடிகளை கொண்டு  ஹோலியை கொண்டாடுங்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்மர் ஸ்பெஷல் - வெயிலை சமாளிப்பது எப்படி ?