தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பனில் நாளை ஐ.நா. தலைமையில் உலக நாடுகள் கூடி பேசும் வானிலை மாநாட்டில் "வானிலை நீதி" கேட்டு வால் ஸ்ட்ரீட்டை ஆக்ரமித்த குழுவினர் போல் ஒரு குழு போராட்டம் நடத்தவுள்ளது.
பேச்சாளர் மூலையிலிருந்து ஒரு இடத்தில் கூடுவோம் என்று க்வாசுலு-நாட்டல் பல்கலைப் பேராசரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முழுதும் இளைஞர்களான இந்த குழு வானிலை மாற்றங்களுக்கு வளர்ந்த, வளரும் நாடுகளின் வெப்பவாயு வெளியேற்றங்களே காரணம் எனவே உறுதியான் தீர்வு தேவை என்ற ரீதியில் இந்த ஆக்ரமிப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
வளர்ந்த தொழிற்துறை நாடுகளின் வெப்ப வாயு வெளியேற்றத்தின் விளைவுகளை ஏழை நாடுகள் சந்தித்து வருகின்றன.
வானிலை பேச்சுவார்த்தைகளில் உறுதியும் இருப்பதில்லை, மந்தமாகவும் உள்ளது. இவர்கள் கூட்டத்தில் 99% மனிதர்களின் தேவை காதுகளில் விழுவதில்லை என்று கூறுகின்றனர் இந்த ஆர்பாட்டக்காரர்கள்.
ஐ.நா. வானிலை மாநாடுகளில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். அரசுகள் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களால் ஊழல் மயமாகி வருகிறது என்று இவர்களது மற்றொரு தீர்மானம் கூறுகிறது.
ஆர்பாட்டம் கடுமையாக இருந்தால் நடவடிக்கை உறுதி என்று தென் ஆப்பிரிக்க காவல்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசுகள் தங்கள் அதிகாரத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் தகிடுதத்தங்களுக்கு பல விதங்களில் அடகு வைத்து வருவது தற்போது உலகம் முழுதும் பெருங்கொந்தளிப்புகளை உருவாக்கி வருகிறது.
"வால்ஸ்ட்ரீட்டை ஆக்ரமி" இயக்கம் போல் காப்- 17-ஐ ஆக்ரமி என்ற இந்த இயக்கமும் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நாளை டர்பனில் இந்த மாநாடு தொடங்குகிறது.