கான்குன் நகரில் நடைபெறும் ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டில் வெப்பவாயு வெளியேற்றக் கட்டுப்பாடு குறித்து சட்டபூர்வ ஒப்பந்ததை இந்தியா ஏற்காது என்று சுற்றுசூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அதாவது சட்டபூர்வ ஒப்பந்தம் என்றால் அதன் உள்ளடக்கம் என்ன, ஒப்பந்ததை செயல் படுத்துவதில் ஒத்துழைப்பு தராத நாடுகளுக்கான தண்டனை, மற்றும் கட்டுப்படுத்துவதை கண்காணிப்பது எப்படி போன்ற விஷயங்கள் தெளிவாக இல்லாதபோது ஒப்பந்தத்தை இந்தியா ஏற்காது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் சட்டபூர்வமாக பிணைக்கும் ஒப்பந்தத்தை மறுத்து வருகின்றனர்.
ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் இந்த சட்டபூர்வ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்து விட்டன.
"வளர்ந்த நாடுகளில் பல இந்தியாவையும், சீனாவையும் சட்டபூர்வ வானிலை ஒப்பந்தத்தை ஏற்கும் படியாக மறைமுகமாக நெருக்கடி கொடுக்கின்றன." என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
கியோட்டோ ஒப்பந்தம் ஒன்றே வானிலை மாற்ற மாநாட்டில் ஏற்பட்ட சட்டபூர்வ ஒப்பந்தமாகும். ஆனால் அதனை பல நாடுகள் இப்போது புறக்கணித்து வருகின்றன.
சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை ஏற்கும் தயார்நிலையில் இந்தியா இல்லை என்று கூறியுள்ள ஜெய்ராம் ரமேஸ்க், ஜி- 77 நாடுகளிலிருந்தே இந்தியா, சீனாவுக்கு எடிராக குரல்கள் கிளம்புவதற்கு வளர்ந்த நாடுகளே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.