Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மான்சான்ட்டோ மரபணு மாற்ற விதைகளால் பாதிக்கப்பட்ட தேன்

Advertiesment
மரபணு மாற்ற விதை
, வியாழன், 8 செப்டம்பர் 2011 (16:15 IST)
உலகம் முழுதும் மரபணு மாற்ற விதைகளை (GM Crops) உருவாக்கி, விதைத்து நிலங்களின் இயற்கை வளங்களை காயடித்து வரும் அமெரிக்காவின் மான்சான்ட்டோ நிறுவனத்தின் மரபணு மாற்ற விதைகளால் ஜெர்மனியில் உள்ள பவேரியா மாநிலத்தில் இயற்கை முறையில் தயாரிக்க்கப்படும் தேன் பாதிக்கபட்டுள்ளது.

இதனையடுத்து ஐரோப்பிய யூனியனின் உச்ச நீதிமன்றம் மரபணு மாற்ற விதைகளால் பாதிக்கப்பட்ட தேனை விற்கத் தடை விதித்துள்ளது.

இது ஒரு மைல்கல் தீர்ப்பு என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சர்வதேச பசுமை இயக்கத்தினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பவேரியா மாநிலத்தில் தேனீக்களை வளர்க்கும் பண்ணைக்கு 500மீ தள்ளி மான்சான்ட்டோவின் பரிசோதனை மக்காச்சோள மரபணு மாற்ற விதைகள் கொண்ட நிலங்கள் உள்ளது. இதிலிருந்து வரும் தாதுக்களால் பவாரியா தேனீக்களிலிருந்து எடுக்கப்படும் தேன் நச்சுத் தன்மையுடையதாக மாறியதாக பவேரியா தேனி வளர்ப்புப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மான்சாண்ட்டொ மரபணு மாற்ற மக்காச்சோள விதைகளின் தாதுக்கள் தங்களது தேனையும் நச்சு மயமாக்குகிறது என்று இவர்கள் தொடர்ந்த வழக்கிற்கு ஐரோப்பிய நீதிமன்றம் சாதகமாகத் தீர்ப்பளித்துள்ளது.

இதனையடுத்து ஜெர்மன் நீதிமன்றத்தில் மான்சான்ட்டோவிடமிருந்து இழப்பீடு கோரும் வழக்கும் தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மரபணு மாற்ற விதைகளால் பாதிக்கப்படும் வேறு எந்த பொருளும் விறக்கப்படுவதற்கு முன்பு பரிசோதனைகளைக் கடந்து பாதுகாப்பானது என்ற அங்கீகாரத்தைப் பெறுவது அவசியம் என்றும் ஐரோப்பைய யூனியனின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரேசிலில் மரபணு மாற்றவிதைகளி ஒழித்தவரும் பிரான்ஸில் அமெரிக்க உணவு விடுதியான மெக்டொனால்ட்ஸை ஒழித்தவருமான பிரான்ஸ் நாட்டு பசுமை அமைப்பைச் சேர்ந்த செயல் வீரரும் முன்னாள் விவசாயியுமான ஜோஸ் போவே, விவசாயிகள் இந்த மரபணு மாற்ற விதைகளிலிருந்து பாதுகாப்பு பெறவேண்டுமென்றால் அதனை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

தேனி வளர்ப்பவர்கள் எவ்வாறு மரபணு மாற்ற மக்காச்சோள விதைகளிலிருந்து வரும் தாதுவினால் ஏற்படும் நச்சுத் தன்மையிலிருந்து பாதுகாக்க முடியவில்லையோ, அவ்வாறுதான் உலகம் முழுதும் உள்ள விவசாயிகளும் உள்ளனர் என்று கூறியுள்ளார் போவே.

பி.டி. என்ற ஒன்றை மண்ணிலேயே உற்பத்தி செய்யும் விதமாக மரபணு மாற்ற விதைகள் செயல்படுகின்றன. இதனால் புழு பூச்சிகள் அண்டாது என்று மான்சான்ட்டோ தரப்பு பிரச்சார விஞ்ஞானங்கள் தெரிவ்க்கின்றன. ஆனால் அது அருகில் உள்ள அனைத்து நிலங்களையும் பாதிப்பதோடு, அந்தக் குறிப்பிட்ட நிலத்தின் பல்வேறு வள ஆதாரங்களையும் சேர்த்தே அழித்து விடுகிறது என்றும், ஒரு முறை பி.டி. விதைகளை பயிரிட்டு விட்டால் அந்த நிலத்தில் மரபான விதைகள் எதையும் பயிர் செய்யவியலாது என்றும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த விதைகள் மானுட உடலுக்கு கடும் தீமை விளைவிக்கிறது என்றும் சுற்றுச்சூழலையும், உயிர்ப்பரவலையும் அழித்து விடுகிறது என்றும் மரபணு மாற்ற விதைகளுக்கான நியாயமான எதிர்ப்புகள் உலகெங்கிலும் பரவி வரும் நிலையில் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல் என்றே பலரும் கருதுகின்றனர்.

இந்தியாவில் பி.டி. பஞ்சு செய்த அலங்கோலங்களும், விவசாயிகள் பெருமளவு தற்கொலை செய்துகொண்டதும் துணைக்கண்டத்தின் இருண்ட வரலாறாகவும் இருப்பதை நாம் பார்த்து வருகிறோம்.

இருப்பினும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் மான்சான்ட்டோவிற்கு ஆதரவான குரல்கள் எழுந்துள்ளன. அதாவது மரபணு மாற்ற விதைகளின் தாதுக்களால் தேனில் பாதிப்பு ஏற்படவாய்ப்பில்லை என்றும் அது தேனீகளின் உள்ளிருந்தே ஏற்படுவது என்றும் சில குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் மரபணு மாற்ற விதைகளின் உண்மை நிலை பற்றிய விழிப்புணர்வு சற்று அதிகரித்து வருவதையே ஐரோப்பிய யூனியன் கோர்ட் உத்தரவு எடுத்துரைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil