Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புவிவெப்பமடைதலின் விளைவு: அமிலமயமாகும் கடல்

Advertiesment
கடல்
, வியாழன், 2 ஜூன் 2011 (16:52 IST)
FILE
பூமியில் உள்ள ஒவ்வொரு கடல் பகுதியும், உற்பத்தி நடவடிக்கைகள் காரணமாக, அதாவது தொழிற்சாலைகள், கார்கள், விமானங்கள் உட்பட பல நடவடிக்கைகளிலிருந்து வெளியாகும் கரியமிலவாயுவினால் அமிலமயமாகி கடல் வாழ் உயிரினங்களின் இருப்பை அச்சுறுத்தி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்கும் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. மனிதனின் உணவுப்பஞ்சத்தைப் போக்கும் மீன்கள் அழிந்து வருகின்றன.

இது குறித்து கடல் ஆய்வு விஞ்ஞானிகள் கூறுகையில். "எரிமலை எவ்வாறு கரியமில வாயுவை கடல்நீருக்குள் செலுத்துகிறதோ, அதே போல் மானுட நடவடிக்கைகளும் மேலும் மேலும் கரியமிலவாயுவை விண்வெளியில் செலுத்தி வருகிறது"

இந்த பில்லியன் டன்கள் கணக்கில் வெளியேற்றப்படும் கரியமிலவாயு அல்லது வெப்பவாயு விண்வெளியில் தங்கியிருந்து அதனை வெப்பமயமாக்குகிறது இதுதான் புவிவெப்பமடைதலாகும். இந்தச் செயல்பாடுகளின் போது சுமார் 30% வாயு கடல்களினால் உறிஞ்சப்படுகிறது இது பிறகு கார்பானிக் அமிலமாக மாறுகிறது. இதன் மூலம் உயிர்க்கொல்லி அமிலமயமாக்கம் நடைபெறுகிறது என்று கடல் ஆய்வாளர் டாக்டர் ஜேசன் ஹால்-ஸ்பென்சர் என்பார் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மணி நேரமும் கடல்கள் மில்லியன் டன்கள் அளவில் கரியமிலவாயுவை உறிஞ்சி வருகிறது. இதனால் கடல்கள் கடந்த நூற்றாண்டை ஒப்பிடும்போது 30% கூடுதலாக அமிலமயமாகியுள்ளன. இதனால் கடல்வாழ் உயிரினங்களின் மறு-உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகிறது.

அமெரிக்க தேசிய கடல் மற்றும் விண்வெளி நிர்வாக தலைவர் டாக்டர் ஜேன் லுப்சென்கோ கடல் அமிலமயமாவது புவி வெப்பமடைதலின் 'தீமை இரட்டை' என்று வர்ணித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐ.நா. வெளியிட்ட வானிலை மதிப்பீட்டு அறிக்கை 400 பக்கங்கள் கொண்டிருந்தாலும் அதில் கடல் நீர் அமிலமயமாதல் பற்றி 2 பக்கங்களே இடம்பெற்றிருந்ததாக ராபின் மெக்கி என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் கடல் பவளப்பாறைகள் ஏற்கனவே 80% புவி வெப்பமடைதலால் முழுதும் காலியாகியுள்ளது. மேலும் பவளப்பாறைகளைக் காக்கும் மீன் வகைகளை அதிகம் வேட்டையாடி வருவதாலும் பவளப்பாறைகள் காலியாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் அமிலமயமாவது என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால் அதில் உள்ள ஹைட்ரஜன் அளவை வைத்து கணக்கிடப்படுகிறது. இது பி.எச். என்று குறிக்கப்படுகிறது. தூய நீரில் பி.எச். 7 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்குக் கீழ் குறைந்தால் அந்த நீர் அமிலமயம் என்று கணக்கிடப்படுகிறது. 7-க்கும் மேல் உள்ளது அல்கலைன் என்று கருதப்படுகிறது. அதாவது காரத்தன்மை உள்ளது என்று பொருள்.

நூற்றாண்டுக்கு முன்பாக கடல் மேற்புற நீரில் பி.எச். 8.2 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்று இது 8.1 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளில் 0.1% தானே குறைந்துள்ளது என்று நினைப்பது தவறான அணுகுமுறை. பி.எஸ். அளவு என்பது மடக்கை (logarithmic) விகித அளவாகும். எனவே 0.1 குறைந்துள்ளது என்றால் கடல் 30% கூடுதலாக அமிலமயமாகியுள்ளது என்று பொருள்.

Share this Story:

Follow Webdunia tamil