டெல்லியில் உள்ள கழிவு நீர்த் தேக்கம் ஒன்றில் போலியோ நோய்க்குக் காரணமான வைரஸ் இருப்பதாக உலகச் சுகாதார மையம் கண்டு பிடித்துள்ளது.
இதனால் டெல்லி மாநில அரசு குழந்தைகளுக்கு அந்த வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேசிய போலியோக் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் கண்காணிப்பை உலகச் சுகாதார மையமும் டெல்லி அரசும் மேற்கொண்டபோது இந்தப் பயங்கரம் தெரியவந்தது.
யமுனை ஆற்றுக்கரையோரப் பகுதிகளான பலாஸ்வா ஏரி, சேமாபுரியில் உள்ள செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனை, ஸ்வார்ன் சினிமாப் பகுதி, ஓக்லா ஆகிய பகுதிகளில் இந்தக் கண்காணிப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பே இப்பகுதிகளில் பயங்கரமான போலியோ வைரஸ் கழிவு நீரில் கலந்திருப்பதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
2010ஆம் ஆண்டு ஏற்கனவே கழிவு நீர்த்த் தேக்கத்திலிருந்து சேகரிக்கப்பட்டு பரிசோதிக்க்ப்பட்ட மாதிரிகளில் டைப் 1, டைப் 3 ரக கடும் போலியோ வைரஸ்கள் இருந்தது என்று இந்தக் கண்காணிப்புத் திட்டக்குழு தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஏன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது எனில் அதிக அளவில் அயல் மாநிலத்திலிருந்து கூலி வேலை செய்ய ஆட்கள் வருவதும், டெல்லியிலேயே அதிகம் போலியோ நோய் தாக்குவதுமே காரணம்.
இந்த 5 இடங்கள் மட்டுமல்லாது மேலும் 15 இடங்களில் இதுபோன்று முன்னெச்சரிக்கைக் கண்காணிப்பு நடத்தப்படவேண்டும் என்று சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது உலகக்ச் சுகாதார மையம்.
போலியோ சொட்டு மருந்துகள், தடுப்பு மருந்துகள் பெரிய அளவில் இங்கு பயன்படுதப்பட்டு வரும் நிலையிலும் 2008ஆம் ஆண்டு 4 குழந்தைகள்க்கும், 2009ஆம் ஆண்டு 5 பேருக்கும் போலியோ தாக்கியது.
இந்தியாவில் இரு வகையான போலியோ வைரஸ்கள் உள்ளன. பி1, மற்றும் ப்3. 2006ஆம் ஆண்டு வரையிலும் பி1 ரக போலியோ வைரஸே இந்தியாவை அதிகம் தாக்கி வந்தது. இந்த வைரஸின் தாக்கம் 2010ஆம் ஆண்டு பெருமளவு குறைந்தது.
உலகிலேயே இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, ஆப்கான் ஆகிய நாடுகளே போலியோ பாதிப்பு நாடுகள் என்ற வேண்டத்தகாத பெயர் பெற்றுள்ளது.
ஆனால் போலியோ வைரஸ் அழிப்பில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக உலகக் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு நாட்டில் 741 பேருக்கு போலியோ வைரச் தொற்று ஏற்பட்டது. ஆனால் இது 2010ஆம் ஆண்டு 42ஆகக் குறைந்தது.