உயிர்ப்பரவல் அமைப்புகளை பாதுகாக்கும் வண்ணம் வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் ஜப்பான் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் நாசமடைவதைத் தடுப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏழை நாடுகளில் ஏற்படும் மோசமான விளைவுகளிலிருந்து அந்த நாடுகள் மீளவும் இந்தத் தொகையை அறிவித்துள்ளதாக ஜப்பான் பிரதமர் நவாடோ கேன் தெரிவித்துள்ளார்.
"ஒத்திசைவில் வாழ்வு ஒரு தொடக்க நிலை" என்ற இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்து வளரும் நாடுகளுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் இந்த நாடுகள் தங்கள் நாட்டு உயிர்ப்பரவல் ஒழுங்கமைப்புகளை பாதுகாப்பதற்கான நடைமுறைகளை அமல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. என்று அவர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.
2010ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளில் இந்தத் தொகை அளிக்கப்படவுள்ளது.