Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மைல் கல் ஒப்பந்தம் எட்டப்பட்டது - ஐ.நா. மகிழ்ச்சி

Advertiesment
சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மைல் கல் ஒப்பந்தம் எட்டப்பட்டது ஐநா மகிழ்ச்சி
, சனி, 30 அக்டோபர் 2010 (17:07 IST)
பூமியின் காடுகள், பவளபபாறைகள் மற்றும் அடுத்த 10 ஆண்டுகளில் அழியும் என்அச்சுறுத்தலுக்குள்ளான இயற்கைச் சுற்றுசசூழல்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை ஐ.ா. எட்டியுள்ளது.

இயற்கை, சுற்றுச் சூழல், நிலம், கடல் பகுதிகள், உயிரினங்கள் பாதுகாப்பு, உயிர்ப் பரவல் அழியாமை உள்ளிட்ட பல்வேறு இன்றியமையாதவைகள் பற்றிய 20அம்சத் திட்டத்திற்கு நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

மனித இருப்பு சார்ந்திருக்கும் உயிர்ப் பரவல், இயற்கை ஆகியவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற பணக்கார, ஏழை நாடுகள் 'திறமையான, அவசரமான' நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளன.

ஜப்பானில் உள்ள நகோயாவில் 193 நாடுகள் பங்கேற்ற ஐ.ா. உச்சி மாநாட்டில் இந்த மைல்கலஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதாவது இதன் முக்கியக் குறிக்கோள்களாமாசுக் கட்டுப்பாடு, காடுகள் மற்றும் பவளப் பாறைகளைக் காப்பது, சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான நிலப்பகுதிகள் மற்றும் நீர் அமைப்புகளை பாழ்படுத்தாமல் இருப்பது, மீன் பிடித் தொழிலையும் அதனை ஊட்டி வளர்க்கும் முறைகளுடன் பாதுகாப்பது உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டன.

ஒப்பந்தம் இன்று ஏற்பட்டதையடுத்து "இந்த நாளைக் கொண்டாடவேண்டும்' என்று ஐ.ா. சுற்றுச்சூழல் திட்டத் தலைவர் ஆச்சிம் ஸ்டெய்னர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களாக வளர்ந்த, வளரும் நாடுகளின் பிரதிநிதிகளிடையே நிலவிய பதற்றம் நிரம்பிய விவாதங்களுக்குப் பிறகு இந்த மைல்கல் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது என்றார் ஸ்டெய்னர்.

பசுமை இயக்கத்தினரும் இந்த ஒப்பந்தம் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதாவது இன்றைய உலகம் எதிர்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை ஐ.ா.உதவியுடன் தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகத் தெரிவித்தனர். குறிப்பாக கோபன்ஹேகன் அராஜகத் தோல்விகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது பலதரப்பிலும் நம்பிக்கை அளிப்பதாக பசுமை இயக்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கியப் பகுதி என்னவெனில் நிலப்பகுதியில் 17 விழுக்காடும், கடல்களில் 10 விழுக்காட்டுப் பகுதிகளும் பாதுகாக்க புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர்ப் பரவலைக் காக்க முடியும் என்று பசுமை இயக்கத்தவர் கூறியுள்ளனர்.

தற்போது நிலப்பகுதியில் 13 விழுக்காடும், கடல்பகுதிகளில் 1 விழுக்காடும் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் கிரீன் பீஸ் அமைப்பு ஒப்பந்தம் குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் வளரும் நாடுகளில் சிலவற்றின் வற்புறுத்தலின் பேரில் சில இடங்களில் சமசரசம் செய்து கொண்டுள்ளதை கிரீன் பீஸ் அமைப்பு ஏமாற்றமாக நோக்குகிறது.

இந்த நகோயா ஒப்பந்தத்தின் முக்கிய குறைபாடு என்னவெனில் அமெரிக்கா இதில் கையெழுத்திடவில்லை. உயிரியல் பரவல் பற்றிய ஐ.ா.முறைமையை ஏற்றுக்கொள்ளாத சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

மற்ற சில பசுமை இயக்கத்தினர் இந்த ஒப்பந்தம் குறித்துக் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தில் எட்டப்பட்டுள்ள 20 அம்சத்த் திட்டம் எதிர்பார்த்ததை விடக் குறைவான இலக்குகளையே கொண்டுள்ளது என்றனர். ஆனால் உயிர்ப் பரவல் குறித்த பிரச்சனைகளைத் தீர்க்க இது ஒரு முக்கியமான முதல்படி என்பதை மறுப்பதற்கில்லை என்று கூறியுள்ளனர்.

கிரீன் பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பு மட்டுமே இந்த ஒப்பந்தம் குறித்து விமர்சனப்பூர்வமான நிலைப்பாடு எடுத்துள்ளது.

கடல் பகுதிகளில் 20% பாதுகாக்கப்படவேண்டும் என்று கிரீன் பீஸ் அமைப்பு வலியுறுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

"பல ஆண்டுகளாக எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் வளர்ந்த நாடுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளையும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் தாமதப்படுத்திக் கொண்டே செல்கின்றன."என்று கிரீன் பீஸ் அமைப்பு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வளரும் நாடுகளில் உள்ள மரபணு வளங்களின் பயன்களையும், தகவல்களையும் நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளும் முடிவு எட்டப்பட்டு, இதில் நிலவி வந்த 18 ஆண்டுகால முட்டுக்கட்டைக் களையப்பட்டுள்ளது இந்த உச்சி மாநாட்டில்தான்.

உலக வளங்களின் தலைமையிடமாகத் திகழும் அமேசான் காடுகளைக் கொண்டுள்ள பிரேசில் இந்த மாநாடு முழுதும் மரபணு வளங்கள் பற்றிய நியாயமான ஒப்பந்தம் இன்றி 20 அம்சத் திட்டத்திற்கு ஒப்புக் கொள்ளமாட்டோம் என்பதை வலியுறுத்திவந்தது.

முக்கியமாக பிரேசிலும் மற்ற வளரும் நாடுகளும் வலியுறுத்திய விஷயம் என்னவெனில், வளர்ந்த நாடுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றைத் தயாரித்து பெரிய லாபம் அடைய வளரும் நாடுகளின் வனத் தாவரங்களை சுதந்திரமாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதைத் தீவிரமாக வலியுறுத்தினர்.

ஐரோப்பிய யூனியனும் இதனை வலியுறுத்தும் 20அம்சத் திட்டத்திற்கு இறுதியாக ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை தற்போதுள்ள 6.8 பில்லியனிலிருந்து 2050ஆம் ஆண்டு 9 பில்லியனாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், உயிரினங்கள் பாதுகாப்பும், உயிர்ப்பரவல் அழியாமையும் மிக மிக இன்றியமையாதது என்பதை விஞ்ஞானிகளும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் வெப்பவாயு வெளியேற்றத்தைக் கட்டுபடுத்தும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் பற்றி என்ன முடிவு எட்டபட்டுள்ளது என்பது பற்றி இதுவரை விவரங்கள் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil