Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்!

காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்!
, சனி, 22 டிசம்பர் 2012 (15:43 IST)
FILE
குளியல் ஷாம்பூ, சோப் மற்றும் ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கும் ஹைட்ரோகார்பன்களை கார்களுக்கான எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என இங்கிலாந்தின் மேன்செஸ்ட்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், அதிகரித்து வரும் பூமியின் வெப்பம் என உலகம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில் மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தைக் கண்டறிவதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் மேன்செஸ்ட்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த நிக் டர்னர் தலைமையிலான ஆய்வாளர்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் இருக்கும் ஹைட்ரோகார்பன்கள் மூலம் கார்களை இயக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. எனவே மாற்றஎரிபொருளுக்கான ஆராய்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியிருக்கும் இந்த ஆய்வுக் குழுவினர் விரைவிலதங்களமுழுமையான ஆய்வறிக்கையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil