கரியமில வாயு வெளியேற்றம் கடுமையாக உயர்வு
, செவ்வாய், 31 மே 2011 (12:42 IST)
புவி வெப்பமடைதலில் அதிக தாக்கம் செலுத்தும் கரியமிலவாயு வெளியேற்ற அளவு கடந்த ஆண்டு கடுமையாக அதிகரித்திருப்பதாக சர்வதேச எரிசக்தி கழகம் தெரிவித்துள்ளது.எரிசக்தி தொடர்புடைய கரியமில வாயு வெளியேற்றம் 2010ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. இது சமீப கால கணக்கீட்டின் படி என்று அந்த கழகம் தெரிவித்துள்ளது.2009
ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடிகளால் குறைந்த கரியமில வாயு வெளியேற்றம் 2010ஆம் ஆண்டு 30.6 கிகாடன்களாக (கிகா டன்= 1 பில்லியன் டன்) அதிக்ரித்துள்ளது.இது கடந்த ஆண்டைக் கட்டிலும் 5% அதிகமாகும்."
கரியமிலவாய்வு வெளியேற்றத்தில் இந்த வித கடும் அதிகரிப்பும் நாடுகள் தொடருந்து உள்கட்டுமானத்தில் அதிகம் முதலீடு செய்வதும், மின் உற்பத்தி நிலையங்கள் நாளுக்கு நாள் பெருகிவருவதும், பூமியின் வெப்பத்தை 2டிகிரி செல்சியஸ் குறைக்கும் சுற்றுச்சூழல் கட்டாயத்தின் மீது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது" என்று சர்வதேச எரிசக்தி கழக பொருளாதார நிபுணர் ஃபைத் பைரல் தெரிவித்துள்ளார்.விண்வெளியில் கரியமிலவாயு அடைவைத் தடுக்க நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்த முடிவுகளின் படி 2020ஆம் ஆண்டில் உலக எரிசக்தி தொடர்பான வெப்ப வாயு வெளியேற்றம் 32 கிகா டன்களைத் தாண்டக்கூடாது என்பது கட்டாயமாகும்.ஆனால் இப்போதே 30.6 கிகா டன்கள் வெப்ப வாயு வெளியேறிவருகிறது. இது போகப்போக அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கியோட்டோ உடன்படிக்கைகளை குழி தோண்டி புதைக்க வளர்ந்த நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா அடியறுப்பு வேலைகளில் ஈடுபட அதன் பிறகு எந்த ஒரு ஒப்பந்தமும் கேலிக்கூத்தாகவே முடிந்து போனது. கோபன்ஹேகன், கான்கன் என்று அனைத்து ஐ.நா. சுற்றுசூழல் மாநாடுகளும் வெற்று சூளுரைகளாக முடிந்து போயுள்ள நிலையில் கரியமில வாயு வெளியேற்றம் குறித்த இந்த புதிய தகவல்களால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு அச்சம் இன்னமும் அதிகரித்துள்ளது.வெப்பவாயு வெளியேற்றத்தில் செல்வந்த நாடுகள் மட்டும் 40% தாக்கம் செலுத்தி வருவதாக சர்வதேச எரிசக்திக் கழகம் 2010ஆம் ஆண்டு அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.வளரும் நாடுகளான சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வளர்ச்சிப் பொருளாதாரக் கொள்கைகளினால் கரியமிலவாயு வெளியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை என்று சர்வதேச எரிசக்தி கழகம் கூறியுள்ளது.கடந்த ஆண்டில் செல்வந்த நாடுகள் அனைத்தும் சேர்ந்து 10 டன்கள் வெப்பவாயு வெளியேற்றம் செய்திருக்கிறது என்றால், சீனா மட்டுமே 5.8 டன்கள் கரியமிலவாய்வை விண்வெளிக்குள் செலுத்தியுள்ளது. இந்தியா 1.5 டன்கள் கரியமிலவாயுவை வெளியேற்றியுள்ளது.