Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்துள்ளது - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Advertiesment
கரியமிலவாயு
, திங்கள், 22 நவம்பர் 2010 (13:29 IST)
கரியமிலவாயு வெளியேற்ற விகிதம் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதாவது முன்னேறிய நாடுகள் ஓரளவுக்குக் குறைத்த கரியமிலவாயு வெளியேற்றம் சீனா, இந்தியாவின் வெப்ப வாயு வெளியேற்றத்தினால் ஈடு செய்யப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு இது கரியமிலவாயு வெளியேற்றம் புதிய உச்சத்தை எட்டலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுவாக ஆண்டொன்றிற்கு பெட்ரோலியப் பொருட்கள், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றின் எரிப்பின் மூலம் 30.8பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100கோடி) டன்கள் கரியமில வாயு விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது.

2009ஆம் ஆண்டு இந்த அளவில் 1.3% குறைந்தது. அதாவது 2008ஆம் ஆண்டைக் காட்டிலும் 1.3% குறைந்தது.

உலக அளவில் குறைக்கப்படவேண்டிய கரியமில வாயு வெளியேற்றம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அரைபங்குக்கும் குறைவாகவே இருந்தது.

2009ஆம் ஆண்டில் ஜப்பானில் வெப்பவாயு எரிப்பு 11.8% குறைக்கப்பட்டது. அமெரிக்கா 6.9% குறைத்தது. பிரிட்டன் 8.6%, ஜெர்மனி 7%, ரஷ்யா 8.4% குறைத்துள்ளதாக நேச்சர் ஜியோ சயன்ஸ் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கின்றது.

ஆனால் மாறாக சீனாவால் 8%, இந்தியாவால் 6.2% கரியமிலவாயு வெளியேற்றம் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் வெப்பவாயு வெளியேற்றத்தில் 24% சீனா பங்களித்து தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. அமெரிக்கா 17% -உடன் 2-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. அதாவது அண்ட வெளியைக் கெடுப்பதில் சீனாவும், அமெரிக்காவும் முதல் 2 இடங்களில் கோலோச்சி வருகிறது.

இயற்கை எரிவாயு எரிப்புதான் கார்பன் வெளியேற்றத்தில் 88% பங்களிப்பு செய்து வருகிறது.

விண்வெளியில் கரியமில வாயு இருப்பு, அதாவது அனைத்துவகையான வெளியேற்றத்தையும் சேர்த்து 387பி.பி.எம். ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் ஒரே மகிழ்ச்சி அளிக்கும் செய்தி என்னவெனில் காடுகள் அழிப்புகள் குறைந்துள்ளது என்று பிரிட்டன் எக்சீட்டர் பல்கலைக் கழக பேராசிரியர் பியர் பிரைட்லிங்ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

காடுகளை அழிப்பதன் மூலம் வெளியாகும் கரியமிலவாயுவின் அளவு மொத்த அளவில் 12%ஆக குறைந்துள்ளது. இது 1990ஆம் ஆண்டு 25% பங்களிப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.8% அதிகரிக்கும் என்ற கணிப்புகள் உண்மையானால் கரியமில வாயு வெளியேற்றம் உறுதியாக அதிகரிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் டிசம்பர் 29ஆம் தேதி மெக்சிகோவில் உள்ள கான்கன் நகரில் ஐ.நா. வானிலை மாற்ற மாநாடு நடைபெறுகிறது. சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil