இதுவரை காணாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உயிர்ப்பொருட்களுடன் கூடிய ஆழ்கடல் எரிமலையைக் கண்டுபிடித்துள்ளதாக ஆஸ்ட்ரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த எரிமலை தற்போது செயல்பாட்டில் இல்லை.
கிரேட் ஆஸ்ட்ரேலியன் பைட் மரைன் பார்க் பெந்திக் பாதுகாப்பு மண்டலம் என்று அழைக்கப்படும் கடல் பகுதியில் 100 மைல் தொலைவில் சுமார் 2000 மீ. ஆழத்தில் இந்த எரிமலையைக் கண்டுபிடித்ததாக தெற்கு ஆஸ்ட்ரேலிய ஆய்வு மற்றும் மேம்பாடு அமைப்பு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் இருக்கும் உயிரிகள் அனைத்தும் தனிச்சிறப்பு வாய்ந்தது என்பதோடு இவை ஆயிரம் ஆண்டுகாலம் பழமை வாய்ந்தது என்று இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்ற எரிமலைகள் அப்பகுதியில் நிறைய இருந்தாலும் இதன் தனிச்சிறப்பு என்னவெனில் எந்த வித மனிதத் தொந்தரவுகளுக்கும் அப்பற்பட்ட இடத்தில் இது உள்ளது. இதனால் இதன் பன்மை உயிரித்தன்மை பாதுகாக்கப்படும்.
கடலடித் தரையில் 800மீ சுற்றளவுடன் காணப்படும் இந்த எரிமலை கடலடித் தரையிலிருந்து 200மீ மேலெழும்பியுள்ளது.
அதாவது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வடவை எரிமலைக் குழம்பான மேக்மா மேலே வர மேற்கொண்ட முயற்சியால் இந்த எரிமலை உருவாகியிருக்கலாம் என்று இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த எரிமலைப் பகுதிக்குள் மீண்டும் பயணம் மேற்கொண்டு அங்கு இருக்கும் பல்வேறு தாவரங்கள் மற்றும் உயிரிகளின் மாதிரிகளைச் சேகரித்து அதன் பன்மய உயிர்ப்பரவல் எத்தகையது என்பதை ஆராய்ச்சி செய்யவுள்ளதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.