Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமேசான் காடுகள் அழிப்பு 6 மடங்கு அதிகரிப்பு

Advertiesment
சுற்றுச்சூழல்
, வியாழன், 19 மே 2011 (11:36 IST)
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இன்றியமையாததாக விளங்கும் அமேசான் காடுகளை அழிக்க்கும் நடவடிக்கை 6 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பிரேசில் அரசு சிறப்பு அதிரடிப்படை ஒன்றை நிறுவி காடுகளைப் பாதுகாக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் 593 சதுர கி.மீ. பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது 6 மடங்கு அதிகமாகும்.

இதனை அந்த நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சர் டெய்க்சீரா கடுமையாகக் கண்டித்துள்ளார். செயற்கைக் கோள் படங்களின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டபோது காடுகள் அழிக்கப்பட்டு அந்த இடங்கள் கால்நடை வளருப்புக்கும், சோயாபீன் விதைப் பயிர் செய்தலுக்கும் பயன் படுத்தப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

இது சட்டவிரோதமான நடவடிக்கை என்றும் இதனைத் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெய்க்சீரா எச்சரித்துள்ளார்.

பரப்பளவில் உலகின் 5-வது மிகப்பெரிய நாடான பிரேசிலில் 53 லட்சம் சதுர கிலோமீட்டர் பகுதி அடர்ந்த காடுகளலான பகுதியாகும். இது பெரும்பாலும் அமேசான் நதியைச் சுற்றி இருப்பதால் அமேசான் காடுகள் என்றே அழைக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் 17 லட்சம் பகுதிகள் அரசு பாதுகாப்பில் உள்ளது.

மீதிப் பகுதிகள் தனியார்வசம் உள்ளது அல்லது யார் உரிமையாளர்கள் என்றே தெரியாமல் உள்ளது.

2004ஆம் ஆண்டு வாக்குக் கணக்கெடுப்பில் 27,000 சதுர கிமீ பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டது, பிறகு அரசின் கெடுபிடி நடவடிக்கைகளால் இது அடுத்த ஆண்டே 6,500 சதுர கிமீ -ஆகக் குறைந்தது.

இதனால் அந்த நாட்டின் பெண் அதிபர் ரூசெப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவர் தனது தேர்தல் வாக்குறுதியில் காடுகள் அழிப்புக்கு வழி வகை செய்யும் சலுகைகளை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil