துருவப்பகுதியான ஆர்க்டிக் பகுதி அதிவேகமாக வெப்பமடைந்து வருவதாக மெல்போர்னைச் சேர்ந்த பூமண்டல விஞ்ஞான ஆய்வுப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சூரிய ஓளியின் தாக்கமும், புவி வெப்பமடைதல் விளைவாகவும் கடல் பனி அதிவேகமாக உருகுவதோடு, கோடைக்காலங்களில் பனிமழயின் அளவும் குறைந்துள்ளது என்று அந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த துருவ வானிலை வெப்ப மாற்றத்தினால் கடந்த 20 ஆண்டுகளாக 40% பனிவிழுதல் நடவடிக்கைக் குறைந்துள்ளது.
பனிப்பாறை என்பது பிரதிபலிப்புத் தன்மை கோன்டது எனவே அது சூரிய ஒளியை வாங்கி அதில் 85%-ஐ மீண்டும் வானுக்கே அனுப்பி விடுகிறது.
கடலின் மிதக்கும் பனிப்பாறைகள் ஒரு சூரியத் திரையாகச் செயல்படுகிறது. இதனால் பனிமலைகள் சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
இப்போது கடலில் மிதக்கும் பனிப்பாறைகள் மிகவும் மெலிதாகி வருகின்றன. இதனால் சூரிய ஒளியின் கதிர்வீச்சின் தாக்கம் கடல்நீரை பெரிதும் மாற்றத்துக்குள்ளாக்கி வருகிறது.
மேலும் மெலிதாவதோடு அதன் பரப்பளவும் குறைந்து வருகிறது. இதனால் கடல்நீர் வெப்பமயமாகி வருகிறது. இதன் விளைவுகள்தாம் தீவிரமான
வானிலை மாற்றங்கள் ஏற்படக் காரணமாகின்றன என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.