Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'அடுத்த 20 ஆண்டுகளில் புயல்களின் தீவிரம் அதிகரிக்கும்'

Advertiesment
சுற்றுச்சூழல்
, புதன், 22 பிப்ரவரி 2012 (22:58 IST)
பெரும்புயல்களின் எண்ணிக்கை குறையும் என்று ஆய்வுகள் தெரிவித்தாலும், வரும் புயல்களின் தீவிரம் அடுத்த 20 ஆண்டுகளில் அதிகமாக இருக்கும் என்று அமெரிக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் இது போன்ற மிகப்பெரிய புயல்களுக்கு பாதிக்கப்படும் மக்கள் தொகையின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் 12% அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த புயல்களின் எண்ணிக்கை குறைந்தாலும் குறைந்த புயல்களின் தீவிரம் அதிகமாகும் என்று இவர்கள் கணித்துள்ளனர்.

பாதிக்கப்படுவோர் பற்றி இந்த ஆய்வு கணக்கிலெடுத்துக் கொண்டது என்னவெனில், பலவீனமான பகுதிகளில் வாழ்பவர்கள், அங்கு நிலவும் வறுமை, அங்கு அந்த நாடுகளின் புயல் காப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைத் திறன்கள் ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆனால் இது குறித்து உலக அளவில் தரவுகள் இல்லாததால் புயல் ஆபத்துகளால் பாதிக்கப்படும் மக்கள் தொகைப் பிரிவினர் யார் யார் என்று கண்டு பிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

உயர்தர கட்டிடங்களைக் கட்ட முடியாமல் வாழும் அடித்தட்டு மக்கள்தான் இதற்கு அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இவர்கள் மட்டுமல்லாது புயல்களின் தீவிரம் அதிகமடைவதால் மேலும் சில உயர் பிரிவ்னர் இடையேயும் இனி வரும் புயல்கள் பாதிப்புகளை ஏற்ப்டுத்தலாம் என்று கூறுகின்றனர்.

வானிலை மாற்ற விளைவுகள் ஒருபுறம் இருக்க, பெருகி வரும் மக்கள் தொகையும் அழிவுகளை அதிகப்படுத்தலாம் என்று இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

நேச்சர் என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு முடிவுகளின் படி சுமார் 20 கோடி பேர் ஏழை நாடுகளில் கடும் புயல்களால் பாதிப்படைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போது சுமார் 13 முதல் 14 கோடிபேர் பவரை பாதிக்கப்படுகின்றனர். இது 2030ஆம் ஆண்டு வாக்கில் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

இது போன்ற மிகப்பெரிய புயற்காற்றுக்கள், தைபூன்கள், மற்றும் சூறாவளிகளால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்துள்ளது.

வளரும், வளர்ந்த நாடுகள் தங்கள் கரியமிலவாயு வெளியேற்ற நடவடிக்கைகள் குறித்து சீரியசாக சிந்திக்கும் நேரம் வந்து விட்டது. உள்நாட்டு, அயல்நாட்டு முதலாளியத்திற்கு சொத்து சேர்த்து கொடுக்கும் கீழை அரசுகள் அதனை 'நாட்டின் முன்னேற்றம்' சொல்லாதல்களின் கீழ் புதைத்து மக்களை ஏமாற்றி வருகிறது.

அரசுகள், குறிப்பாக வளரும், வளர்ந்த நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் பொறுப்புணர்வுடன் சிந்திக்கவேண்டிய நேரம் வந்து விட்டது என்பதையே மேற்கண்ட எச்சரிக்கைகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil