Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

30 ஆண்டுகளாக சுருங்கி வரும் பூமி - உறுதிசெய்யும் விண்கல புகைப்படங்கள்

30 ஆண்டுகளாக சுருங்கி வரும் பூமி - உறுதிசெய்யும் விண்கல புகைப்படங்கள்
, வெள்ளி, 4 ஜனவரி 2013 (18:27 IST)
FILE
பூமி 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இப்போது சுருங்கி வருவதை லேண்ட்சாட் 5 என்னும் விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படங்கள் உறுதிசெய்துள்ளன.

பூமியின் புவியியலை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுக்க அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தால் 1984 ஆம் ஆண்டு லேண்ட்சாட் 5 என்னும் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படங்கள் பூமியின் பெரும் பகுதி கடந்த 30 ஆண்டுகளில் சுருங்கி வருவதை காட்டுகின்றது.

கடந்த 29 வருடங்களாக தொடர்ந்து இயங்கி வரும் இந்த விண்கலம் பூமியை 1 லட்சத்து 50 ஆயிரம் முறை சுற்றி வந்து சுமார் இரண்டரை மில்லியன் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளது.

அப்புகைப்படங்களில் உலகின் மிக பெரிய ஏரிகளான ஏரல் சீ, சட் ஆகியவை அவற்றின் முந்தைய பரப்பளவில் இருந்து மெல்ல சுருங்கி தற்போது அதனுடைய மொத்த பரப்பளவில் 10 சதவீதம் அளவே எஞ்சியுள்ள புகைப்படம் இருக்கிறது.

இதே போன்று பூமியில் உள்ள பல இடங்களின் முந்தைய புகைப்படங்களோடு தற்போது இருக்கும் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்தால் பெரும்பாலான இடங்களின் அதிகமான புவியியல் மாற்றங்கள் நடந்திருப்பதை புகைப்படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த 30 ஆண்டுகளில் பூமியில் ஏற்பட்டுள்ள சூறாவளி, சுனாமி, காட்டுத்தீ, வனம் அழிப்பு, எண்ணெய் கசிவு என பெரும்பான்மையான நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை எடுத்து தந்துள்ள லேண்ட்சாட் 5 விண்கலம் பலமுறை செயலிழந்த போதும் அதனை நாசா விஞ்ஞானிகள் அவ்வப்போது சரி செய்து வந்தனர்.

தற்போது விண்கலத்தின் முக்கிய பாகமான கைரோஸ்கோப் செயலிழந்ததை தொடர்ந்து இந்த விண்கல பயன்பாடு முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகாலமாக பூமியில் ஏற்பட்ட மாற்றங்களை தெளிவாக புரிந்துகொள்ள லேண்ட்சாட் 5 எடுத்த புகைப்படங்கள் பெரும் உதவி புரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil