2025ஆம் ஆண்டுவாக்கில் உலக நாடுகளில் இரண்டில் மூன்று பங்கு நாடுகளில் தண்ணீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படும் அதே வேளையில் 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கு தண்ணீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என்று தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவிச் செயலர் ராபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார்.
"அதாவது 2025ஆம் ஆண்டில் தண்ணீரின் தேவைக்கேற்ப இருப்பு இல்லாமல் போகும், அல்லது தண்ணீரின் தரம் குறைந்து அதனை பயன்படுத்த இயலாது போகும். ஆசியாவில் இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்" என்று ராபர்ட் பிளேக் தெரிவித்தார்.
"உதாரணமாக இந்தியாவில் 2020ஆம் ஆண்டு தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும். அதாவது இன்னும் 9 ஆண்டுகளே உள்ளன. இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குன்றும்." என்றும் அவர் திபெத் சுற்றுச்சூழல் மாநாட்டில் எச்சரித்துள்ளார்.