Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளிவெள்ளம்

சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளிவெள்ளம்
, செவ்வாய், 31 ஜனவரி 2012 (18:30 IST)
பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம்-பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது.

2005ஆம் ஆண்டிற்குப் பிறகு இத்தகைய காந்தப்புயல் பூமியைத் தாக்கியுள்ளது. வடக்கு ஸ்காண்டிநேவையாவில் வானில் ஒளிவெள்ளம் கடந்து சென்றபோது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்ததாக அயல்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விமானங்கள் செல்லும் பாதைகளை தற்காலிகமாக மாற்றி அமைத்து இருந்தனர். இந்த காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனில் நேற்று முன் தினம் கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சு உருவாகி அன்றைய தினமே பூமியின் காந்த மண்டலத்திற்குள் வந்து விட்டதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.

விஞ்ஞானிகள் அதிநவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். பூமியின் வடமுனையில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மற்றும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இது போன்ற ஒளிவெள்ளம் தோன்றுவது வழக்கம். என்றாலும் இந்த முறை சூரிய காந்த புயலால் ஜனவரி மாதத்தில் இந்த ஒளி வெள்ளக்காட்சி தோன்றியதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி காலை சூரியனின் மேல் பகுதியில் அணுகுண்டு வெடிப்பது போல 2 தடவை மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. வெடிப்பு ஏற்பட்டபோது பயங்கர வெப்பம் கிளம்பி இருக்கிறது. அது பூமியை நோக்கி மணிக்கு 9 கோடியே 30 லட்சம் மைல் வேகத்தில் வந்தது.

பூமிக்கு மேல்பகுதியில் வாயு மண்டலத்தை தாண்டி ஏராளமான செயற்கை கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த செயற்கை கோள்கள் செய்து வருகின்றன. சூரியனில் இருந்து வரும் அதிக வெப்பம் செயற்கைகோள்களை தாக்க வாய்ப்பு உள்ளது.

சூரியனில் ஏற்படும் மின்காந்த புயலின் தாக்கம் வரும் 2013-ல் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil