Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிவை வளர்க்கும் அபாக° பயிற்சி

அறிவை வளர்க்கும் அபாக° பயிற்சி

Webdunia

அந்தப் பிஞ்சு விரல்கள் மணிச்சட்டத்தின் பல நிற மணிகளை வேகமாக நகர்த்துவதைப் பார்க்கும் பொழுது அவர்கள் ஏதோ ஒரு விளையாட்டில் சுவாரசியமாக ஈடுபட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் சிறு கூட்டல், கழித்தல் கணக்குகளைத்தான் அப்படி விளையாட்டாகக் கற்றுக் கொள்கிறார்கள்.

ஆம்! அபாக° பயிற்சி முறை சிறுவர்களும் குழந்தைகளும் ஒரு விளையாட்டைப்போல் எளிதாகக் கற்றுக் கொள்ளக் கூடியதுதான்.

பொதுவாகவே, இன்றைய வளரும் குழந்தைகளின் அறிவு கூர்மையைப் பார்க்கும்பொழுது நமக்கே வியப்பாக இருக்கிறது. பல திறமைகள் ஒருசேர அவர்களிடம் வளர்ந்து வருவதையும் பார்க்கிறோம்.

அவர்களின் அறிவுத்திறனை மேலும் வளர்க்கப் பல புதிய வழிமுறைகள் வந்தாலும், அபாக° பயிற்சி முறை அவற்றில் முதலாவதாக நிற்கிறது.

சிறுவயதுக் குழந்தைகளுக்கு ஒன்று, இரண்டு என்று எண்ணுவதற்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பல நிற மணிகள் கொண்ட மணிச்சட்டத்தை நாம் பார்த்திருக்கிறோமல்லவா? அதே போல் (சற்றே வேறுபாடு கொண்ட) மணிகளடங்கிய மணிச்சட்டத்தை தான் அபாக° முறையிலும் பயன்படுத்துகிறார்கள்.

எல்.கே.ஜி படிக்கும் நான்கு வயது நிரம்பிய குழந்தைக்கு ஒன்று முதல் 100 வரை எழுதத் தெரிந்திருக்கும் அடிப்படையில் இப்பயிற்சியைத் தொடங்கலாம்.

முதல் நிலையில் (I Level ) தமது இரு கை விரல்களையும் பயன்படுத்தி கூட்டல், கழித்தல் கணக்குகளைச் செய்ய சுமார் 15 நாட்களில் கற்றுவிடுகிறார்கள் குழந்தைகள். இரண்டு மணி நேரம் கொண்ட ஒரு நாள் பயிற்சி குழந்தைகளின் கவனத்தைப் பொருத்தும் வகையிலும், உற்சாகப் படுத்தும் முறையிலும் அமைக்கப் பட்டிருப்பதால் மிகவும் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு கூட்டிக் கழித்தலைக் கற்றுக் கொள்கிறார்கள், என்கிறார் திருமதி. கீதா விவேக்.

பத்து நிலைகளாகப் (10 Levels) பிரிக்கப்பட்டுள்ள இந்தத் தொடற்பயிற்சியில் ஒவ்வொரு நிலையிலும் மூன்று மாத காலம் பயிற்சியளிக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு 2 மணி வீதம் 12 - 15 நாட்களில் குழந்தைகள் அடுத்த நிலைக்கு தயாராகி விடுவதாகத் தெரிவிக்கிறார் கீதா. இவர் இதற்காக "ஐடியல் ப்ளே அபாக°" (IPA) என்ற நிறுவனத்தில் தனிப்பயிற்சி பெற்று "கால்குல°" என்ற பெயரில் தனது (franchisee) நிறுவனத்தின் மூலம் மூன்றாண்டுகளாக இந்தப்பயிற்சியளித்து வருகிறார்.

பள்ளி நடக்கும் நாட்களில் வாரம் ஒரு முறை விடுமுறை தினமான சனிக்கிழமைகளில் நடத்தினாலும், கோடை விடுமுறையில் "சம்மர் கேம்ப்" அடிப்படையில் தினமும் தொடர்ந்து 15 நாட்களுக்கு சென்னை பெருங்குடி பகுதியில் முதல் நிலைப் பயிற்சியளிக்கிறார். 4 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்குத்தான் முதல் நிலை - அடிப்படைப் பயிற்சி தரப்படுகிறது.

கூட்டல், கழித்தல் முறைகளை முதல் இரு நிலைகளில் நன்கு கற்றுக் கொண்ட பின்பு மூன்றாவது கட்டம் வரும்போது, மனதிலேயே மணிச்சட்டத்தைக் கற்பனை செய்து (டைப் ரைட்டிங்கில் பார்க்காமலேயே அடிப்பது போல்) படிப்படியாகப் பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளையும் - அவை பெரிய எண்களாக இருந்தாலும் சில வினாடிகளில் இவர்களால் செய்ய முடிகிறது.

இந்த அபாக° முறையில் கணிதம் கற்கும் குழந்தைகளின் அறிவுத்திறன் நன்கு வளர்வதோடு அவர்களின் தன்னம்பிக்கை (Confidence) படைக்கும் ஆற்றல் (ஊசநயiஎவைல) ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை (Creativity), தர்க்க அடிப்படையில் பகுத்தறியும் அறிவு (Logical Thinking) போன்றவையும் பலப்படுத்தப் படுகின்றன. மொத்தத்தில் அறிவின் பல பரிமாணங்கள் பட்டை தீட்டப்படுகின்றன.

அவர்கள் படித்துவரும் கல்வியிலும் நல்ல கவனம் செலுத்துகிறார்கள். சில பள்ளிகளில் அடிப்படைப் பாடங்களோடு (Regular Curriculum) அபாக° முறைப் பயிற்சியையும் பாடத்திட்டத்தோடு இணைத்திருப்பதாகக் கூறுகிறார் ஐ.பி.ஏ. வின் பயிற்ச்சி இயக்குநர் திருமதி சித்ரா ரவீந்திரன்.

சென்னையில் மட்டும் 35 கிளைகளும் (Franchisees) தமிழ் நாட்டில் 47 கிளைகளுமாக இயங்கி வருகிறது ஐடியல் ப்ளே அபாக° நிறுவனம்.

இந்தப் பயிற்சியை முறையாகக் கற்பிப்பதோடு, சொந்தத்தில் நிறுவி குழந்தைகளுக்கு அபாக° பயிற்சியளிப்பதற்கான எல்லா உதவிகளையும் அளித்து தன்மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் வளர்ச்சியையும் ஊன்றிக் கவனித்து உதவுகிறது ஐ.பி.ஏ. நிறுவனம்.

ஆண்டுக்கு ஒரு முறை அகில இந்திய அளவில் போட்டிகள் நடத்தி அபாக° பயிற்சி பெறும் குழந்தைகளின் ஆர்வத்தையும், திறமையையும் மேலும் மேலும் ஊக்குவிக்கிறது ஐ.பி.ஏ.

Share this Story:

Follow Webdunia tamil