அடுத்த வார இறுதிக்குள் 5000 பணியிடங்களுக்கான க்ரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் என கூறப்படுகிறது.
தமிழக அரசு பணியில் காலி இடங்களுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பனியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் அதற்கான தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுவருகிறது. அதன்படி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு -3, நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட பல பணிகளை குரூப் 4 தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்த பிரிவில் சுமார் 5000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் ஒரு வார காலத்துக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த தேர்விற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே.
தேர்வு அட்டவணையின்படி இத் தேர்விற்கான அறிவிப்பு ஜூலை 3வது வாரத்தில் வெளியாகியிருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.