முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன என ஸ்டேட் வங்கி அழைப்பு விடுத்துள்ளது.
வயது வரம்பு:
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 01.09.2016 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எஸ்சி, எஸ்டி. ஓபிசி பிரிவினர் உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
தகுதி:
குறிப்பிட்ட பிரிவுகளில் பொறியியல் துறையில் பி.இ., பி.டெக். முடித்தவர்கள், புள்ளியியல், எக்கனாமெட்ரிக்ஸ் போன்ற முதுகலை பட்டம் மற்றும் இதர துறைகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600.
எஸ்.சி., எஸ்.டி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் அஞ்சல் முகவரி:
“The General Manager, State Bank of India, Corporate Centre, Central Recruitment & Promotion Department, Atlanta Building, 3rd floor, Plot No. 209, VBR, Block No.III, Nariman Point, Mumbai - 400 021.”
ஆன்லைனில் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 22.10.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சேர கடைசி தேதி: 26.10.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 25.11.2016 (எதிர்பார்க்கப்படுகிறது)
மேலும் விவரங்களுக்கு http://www.sbi.co.in/webfiles/uploads/files/ENGLISH_SCO_OCT_2016.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.