உதவி நிர்வாக அதிகாரி என்ற பொறுப்பில் 700 பணியிடங்களுக்கான அறிவிக்கையை எல்.ஐ.சி வெளியிட்டிருக்கிறது.
எல்.ஐ.சி.யில் (ஆயுள் காப்பீட்டுக் கழகம்) அதிகாரியாகப் பணிபுரிவதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. பணியில் அமர்ந்தவுடன், ஏ பிரிவு நகரங்களில் அமர்த்தப்பட்டால், சுமார் 40 ஆயிரம் ரூபாய்(இதர சலுகைகள் தனி) மாத ஊதியமாகக் கிடைக்கும்.
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
வயது : - 21 வயது முதல் 30 வயது [டிசம்பர் 1, 2015 கணக்கீடு]. (இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தளர்ச்சி உண்டு).
விண்ணப்பிக்கும் காலம்: 15.12.2015 முதல் 05.01.2016 வரையில்.
தேர்வுத்தேதி: 5, 6 மற்றும் 13 மார்ச் 2016 (உத்தேசத் தேதிகள்).
விண்ணப்ப கட்டணம்:
எஸ்.சி./எஸ்.டி./மாற்றுத்திறனாளிகளுக்கு - 100 ரூபாய்
மற்ற அனைவருக்கும் - 600 ரூபாய்
ஏற்கனவே வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும். கூடுதலான பொது அறிவுத் தகவல்களைப் படிக்க வேண்டியது அவசியமானதாகும்.