Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் ரூ.15,700ல் அரசு வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் ரூ.15,700ல் அரசு வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
, ஞாயிறு, 13 ஜனவரி 2019 (09:11 IST)

பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: மொத்த காலியிடங்கள்: 62

1.Computer Operator Temporary - 06
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

2. Examiner - 02 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

3. Reader - 01 
4. Senior Bailiff - 01 
5. Driver - 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

6. Junior Bailiff - 03 
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

7. Xerox Machine Operator - 03
சம்பளம்: மாதம் ரூ. 16,600 - 52,400

8. Office Assistant - 24 
9. Night Watchman - 07
10. Masalchi - 09 
11. Scavenger - 01
12. Sweeper - 03 
13. Sanitary Worker - 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: கணினி துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஏ, பி.காம், பி.எஸ்சி முடித்தவர்கள் டிப்ளமோ கம்பியூட்டர் அப்ளிகேஷன் முடித்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், ஜெராக்ஸ் மெஷின் இயக்குதல் வகுப்பு முடித்து, 6 மாதம் அனுபவம் பெற்றவர்கள், தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் அந்தந்த தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: பொது பிரிவினர் 30க்குள்ளும், பிசி, எம்பிசி பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி,எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளம் இருக்க வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள தகுதிக்கும் அதிகமான தகுதி பெற்றிருப்பவர்களுக்கு வயதுவரம்பில்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:https://districts.ecourts.gov.in/perambalur என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர் மாவட்டம் - 621 212

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Perambalur%20District%20Judiciary%20Recruitment%20called%20for%20as%20on%2028-12-2018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.01.2019


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உபியில் மாயாவதி-அகிலேஷ் கூட்டணி: ராகுல்காந்திக்கு பின்னடைவா?