Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு துணை ராணுவத்தில் 429 பணியிடங்கள்!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (15:00 IST)
துணை ராணுவ படையில் 429 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


 
மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) ஹெட் கான்ஸ்டபிள்  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 429 பேர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.  இதில் 328 ஆண்களும், 37 பெண்களும் பணியில் அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணியில் சேர விரும்புபவர்களுக்கான தகுதிகள் மற்றும் விவரங்களை பார்க்கலாம்.
 
வயது வரம்பு
 
விண்ணப்பதாரர்கள், 20.2.2019ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
 
கல்வி தகுதி
பிளஸ் 2 மற்றும் இன்டர்மீடியட் படித்தவர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.
 
கட்டணம்
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்,மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
 
உடல் தகுதி
 
விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் ஆண்கள் 165 செ.மீ. உயரமும் பெண்கள் 155 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். வயது மற்றும் உயரத்துக்கு ஏற்ற எடையளவு, கண்பார்வை சோதிக்கப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கும், பெண்களுக்கும் உயரம் மற்றும் மார்பளவு உள்ளிட்டவற்றில் சில விதிவிலக்குக்ள் அனுமதிக்கப்படுகிறது.
 
தேர்வு செய்யும்முறை
 
எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி , மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானர்வர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
 
விண்ணப்பிக்கும் முறை
 
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணைதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க டைசி நாள் 20.2.2019ம் தேதியாகும்.
 
 விண்ணப்பிக்கவும்,விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.cisf.gov.in/recruitment/  என்ற இணைதள பக்கத்தை பார்க்கவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments