கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள டிரை-வாலி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்து, போலி விசா சிக்கலில் மாட்டிக் கொண்டு, அந்நாட்டு குடியேற்றத் துறையால் கண்காணிக்கப்பட்டு வந்த இந்திய மாணவர்களில் மேலும் 4 பேருக்கு டிராக்கர் டாக் நீக்கப்பட்டுள்ளது.
இவர்களையும் சேர்த்து ரேடியோ டிராக்கர் டாக் அணிவிக்கப்பட்ட 18 இந்திய மாணவர்களில் 11 பேருக்கு நீக்கப்பட்டுள்ளது. இன்று மேலும் 4 மாணவர்களுக்கு ரேடியோ டிராக்கர் நீக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சான் பிரான்சிஸ்கோ நகரின் இந்திய துணைத் தூதரக அதிகாரி சுஷ்மிதா கங்கூலி தாமஸ் கூறியுள்ளார்.
இவர்களைத் தவிர மற்ற மூன்று பேரும் சொந்தமாக வழக்குரைஞர் வைத்து சட்டப்படி வழக்கை சந்திக்க முடிவெடுத்துள்ளனர். அவர்களுக்கு சான் பிரான்சிஸ்கோவில் இயங்கிவரும் தெற்காசிய வழக்குரைஞர்கள் சங்கம் உதவிவருகிறது.