மத்திய ரிசர்வ் காவல் படையில் தலைமை காவலர் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு
, வியாழன், 6 பிப்ரவரி 2014 (20:34 IST)
மத்திய ரிசர்வ் காவல் படையில் அமைச்சரவை தலைமை காவலர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த பணியிடங்கள் : 482 (பொது - 441, முன்னாள் ராணுவத்தினர் - 41)விண்ணப்பிக்க கடைசி தேதி - மார்ச் 12, 2014தொலைதூர இடங்களுக்கான கடைசி தேதி - மார்ச் 19, 2014கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக இண்டர்மீடியட் (10+2) அல்லது அதற்குச் சமமான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தி தட்டச்சு முறையில் 30 வார்த்தைகளும் இருக்க வேண்டும். சம்பளம்: 5200 - 20200. (கிரேட் பணம் ரூ.2400)வயது வரம்பு: 12.3.2014 அன்று 18 வயது முதல் 25 வயது வரை. மிகவும் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டோர், உடல் ஊனமுற்றோருக்கு சில வயது வரம்பில் சில தளர்வுகள் உண்டு.தேர்வு முறை இரண்டு விதமாக நடைபெறும். முதல் கட்டம்: சான்றிதழ் / ஆவணங்களை ஆய்வு செய்தல், உடல் தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவைஇரண்டாம் கட்டம்: திறனறி தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவைஎழுத்து தேர்வின் விவரங்கள்:பகுதி 1: ஹிந்தி / ஆங்கில மொழிபகுதி 2: பொது அறிவுபகுதி 3: எண்ணியல் திறன்பகுதி 4: எழுத்து திறன்
மொத்த மதிப்பெண்கள்: 200விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-. குறிப்பிட்ட மையத்தின் DIGP, GC, மற்றும் CRPFக்கு செல்லுபடியாகும் விதத்தில் போஸ்டல் ஆர்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். அனைத்து மகளிர் விண்ணப்பதாரர்கள், இட ஒதுக்கீட்டு பிரிவின் விண்ணப்பதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு உண்டு.