தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களையும் அன்றைய தினமே பள்ளிகளில் அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. இந்த தேர்வுகளின் முடிவு 23-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு வெளியிடப்படும்.
அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், இணையதளங்கள், செல்போன் எண்கள், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தமிழ்.வெப்துனியா.காம் வெளியிடுகிறது.