Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூன் 15‌ல் 10ம் வகுப்பு ம‌தி‌ப்பெ‌ண் ப‌‌ட்டிய‌ல்

Advertiesment
ஜூன் 15‌ல் 10ம் வகுப்பு ம‌தி‌ப்பெ‌ண் ப‌‌ட்டிய‌ல்
, செவ்வாய், 26 மே 2009 (14:55 IST)
மார்ச், ஏப்ரல் மாதங்களில் எஸ்எஸ்எல்சி, ஓல்டு எஸ்எஸ்எல்சி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் ஆகியபிரிவுகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 15ம் தேதி முதல் ப‌ள்‌ளிக‌ளி‌ல் வழங்கப்பட உ‌ள்ளது.

அவரவர் தேர்வு எழுதிய மையங்களில் 17ம் தேதி வரை மதிப்பெண் பட்டியலை நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் 5ம் தேதி வரை முதன்மை, மாவட்ட கல்வி அலுவலகங்களிலும், மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மறுகூட்டலுக்கான கட்டணத்துடன் ஜூன் 5ம் தேதி மாலை 5 மணிக்குள் இதே முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இருதாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ.305ம், ஒருதாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ.205ம் மறுகூட்டல் கட்டணமாக செலுத்த வேண்டும்.

சென்னையைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை-6 என்ற முகவரி‌க்கு வங்கி வரைவோலை(டிடி) அல்லது வங்கி காசோலை (பேங்கர்ஸ் செக்) எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

பாண்டிச்சேரி, காரைக்கால் உட்பட தமிழகத்தின் மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கருவூலச்சீட்டு மூலம் கட்டணத்தைச் செலுத்தி அதன் பிரதியை இணைத்து அனுப்ப வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil