தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்விற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் 13,320 இரண்டாம் நிலைக்காவலர்கள்(ஆண், பெண்), இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள்(ஆண்) மற்றும் தீயணைப்போர்கள் பதவிகளுக்கான நேரடி பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் 23-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 30-ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்படுள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது