ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாத சென்னை விண்ணப்பதாரர்கள் பழைய சட்டமன்ற விடுதியில் இயங்கி வரும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தையும், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியையும் அணுகி தற்காலிக ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் தெரிவித்துள்ளார்.
வருவாய் கோட்டாச்சியர் (RTO), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) உள்ளிட்ட உயர் பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மே 2ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை உள்பட 33 மையங்களில் நடைபெற உள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு வருகிறது. தேர்வு மைய விவரம் மற்றும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதுபற்றிய விவரம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும்.
நாளை வரை ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாத சென்னை விண்ணப்பதாரர்கள் பழைய சட்டமன்ற விடுதியில் இயங்கி வரும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தையும், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியையும் (RTO) அணுகி தற்காலிக ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்த ஆவணம், ஒரு வெள்ளைத்தாளில் புகைப்படம் ஒட்டி, கெசட்டடு அதிகாரியிடம் சான்றாதார கையெழுத்து (Attestation) பெற்ற ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
வரும் 29ஆம் தேதி முதல் மே 1ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தற்காலிக ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் தெரிவித்துள்ளார்.