கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக இயக்குனராக உயர எளிமையான ஏணிப்படி பொறியியல் பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ படிப்பதுதான் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான எளிய வெற்றிப்பாதை பொறியியல் படிப்புடன் எம்.பி.ஏ படிப்பதுதான். ஆச்சர்யமில்லாமல் இன்றைய இந்திய நிறுவனங்களில் உள்ள தலைமை நிர்வாக இயக்குனர்களில் பெரும்பாலும் இந்தப்பாதையில் வந்தவர்கள் தான்.
உலக வேலைவாய்ப்பு மற்றும் தேர்வு நிறுவனமான ரேண்ட்ஸ்டாட் முதன்மை நிறுவனங்களில் சி.இ.ஓ.க்களின் பயோ டேட்டாக்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.
அதில் 45% முதன்மை கல்வித் தகுதியாக எஞ்ஜினியரிங் பட்டப்படிப்பு பெற்றுள்ளது தெரியவந்தது. இந்த 45%-இல் 78% முதுகலை பட்டப்படிப்பு வரை சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதில் முக்கியமானது என்னவெனில் இவர்களில் 64 சதவீதத்தினர் எம்.பி.ஏ. பட்டப்படிப்புக்கு சென்று வெற்றிகரமகா வெளியே வந்துள்ளனர் என்பதே.
மும்பை பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட 100 நிறுவனங்களின் சி.இ.ஓ பற்றியே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் 42% சி.இ.ஓ.க்கள் எம்.பி.ஏ. டிகிரியை ஐ.ஐ.எம்., எக்ஸ்.எல்.ஆர்.ஐ., ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட், மற்றும் வார்ட்டன் ஆகிய கல்வி நிறுவனங்களில் படித்துப் பெற்றுள்ளனர்.
ஆய்வில் தெரியவந்துள்ளது என்னவெனில் பெரிய அளவுக்கு, அதாவது சி.இ.ஓ. அளவுக்கு முன்னேறியவர்கள் பெரும்பாலும் பொறியியல் பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ. படித்தவர்களாகவே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 45% இந்திய பல்கலைக் கழங்களில் எம்பிஏ படித்தவர்களே மீதி 55% அயல் நாட்டு பல்கலைக் கழகங்களைத் தேர்வு செய்தவர்கள்.
நால்ல கார்ப்பரேட் வாழ்க்கை அமைய பொறியியல் பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ. அவசியம் என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
எம்பிஏ போன்ற படிப்புகள் தற்போதைய போட்டி நிறைந்த வணிக நிலவரங்களை சமாளித்து ஆட்கொள்ள கருத்தாக்க அளவில் பெரிய உதவியையும் பயிற்சியையும் அளிப்பதாக Dulux என்ற பிராண்டைத் தயாரிக்கும் நிறுவன நிர்வாக இயக்குனர் அமித் ஜெயின் கூறுகிறார்.
எனவே 3 இடியட்ஸ் படம் அல்லது நண்பன் படம் கூறுவது போல் பொறியியல் பட்டப்படிப்பு விளையாட்டு ஒரு சிலருக்குத்தான் ஒத்து வரும் மற்றவர்கள் தங்களுக்கு கவிதை எழுத வருகிறதா அதை கவனியுங்கள் அல்லது உங்களுக்கு போட்டோகிராபி வருகிறதா அதில் செல்லுங்கள் என்று கூறுவது பொருந்தாது. இந்த போட்டி உலகில் அனைவரும் பொறியியல் பட்டப்படிப்பு படிப்பதுதான் சிறந்தது என்று கூறுகிறது இந்த ஆய்வு.