ஐந்தாண்டு பி.எல். படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு, சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று துவங்கியது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன். இந்தக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளில் (பி.எல்) சேருவதற்கான கலந்தாய்வு இன்று துவங்கி ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.