கலிஃபோர்னியாவின் டிரை-வாலி பல்கலையில் படிக்கச் சென்று போலி விசா காரணமாக நாடு கடத்தப்படும் நிலையில் உள்ள இந்திய மாணவர்களின் நிலை குறித்து அமெரிக்க அயலுறவு செயலர் ஹில்லாரி கிளிண்டனுடன் இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியுள்ளார்.
இந்திய மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்றும், இப்பிரச்சனையில் தலையிடுமாறும் ஹில்லாரியை கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகவலை அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் தெரிவித்துள்ளார்.
விசா பிரச்சனையை தீர்க்கவும், அவர்களை வேறு பல்கலைகளில் சேர்க்கவும் அமெரிக்க குடியேற்றத் துறையுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் மீரா சங்கர் கூறியுள்ளார்.
அமெரிக்க சுங்கம் மற்றும் குடியேற்றத் துறையின் இயக்குனர் ஜான் மார்ட்டனை சந்தித்துப் பேசிய மீரா குமார், அத்துறை எடுக்கும் எந்த நடவடிக்கையும், அப்பாவி மாணவர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க அயலுறவு அமைச்சகத்துடனும், உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்துடனும் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் மீரா சங்கர் கூறியுள்ளார்.