நாளிதழ்கள், செய்தி நிறுவனங்களில் பணியாற்றிடும் இதழாளர்களுக்கும், இதர நிறுவன ஊழியர்களுக்கும் தற்போது வழங்கப்படுகிற ஊதியத்தை இரண்டரை முதல் மூன்று மடங்குவரை உயர்த்த வேண்டும் என்று இதழாளர்களுக்கான ஊதிய வாரியம் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.
மத்திய இதழாளர்களுக்கான ஊதிய வாரியத்தின் தலைவரான நீதிபதி ஜி.ஆர்.மஜிதியா தனது பரிந்துரையை மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் வழங்கினார். அதில் இந்த ஊதிய உயர்வு 2008ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
தற்போது இதழாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியம், பஞ்சப்படி, 30 விழுக்காடு இடைக்கால நிவாரணம் ஆகியவற்றை கூட்டி, புதிய ஊதிய விகிதம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.