இதழாளர்களின் ஊதிய நிர்ணயம் தொடர்பான தனது பரிந்துரையை, அது குறித்து ஆய்வு செய்த நீதிபதி ஜி.ஆர். மஜிதியா தலைமையிலான ஊதிய வாரியம் நாளை மத்திய அரசிடம் அளிக்கிறது.
பணியாற்றிடும், பணியாற்றாத இதழாளர்கள், நாளிதழ்களில் பணியாற்றும் இதர ஊழியர்கள் ஆகியோரின் ஊதியம் தொடர்பான பரிந்துரையை அளிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி மஜிதியா தலைமையிலான ஊதிய வாரியத்தின் பணிக்காலம் கடந்த மே மாதம் 23ஆம் தேதியுடன் முடிவுற்றது. ஆனால் பரிந்துரையை தயாரிக்க நீதிபதி மஜிதியா கால அவகாசம் கேட்டதையடுத்து டிசம்பர் மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டது.
நீதிபதி மஜிதியா தனது பரிந்துரைகளை நாளை மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்திடம் அளிக்கவுள்ளார். அதனை பெற்றுக்கொள்ளும் தொழிலாளர் அமைச்சகம் முழுமையாக பரிசீலனை செய்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலிற்கு அனுப்பும்.
நீதிபதி மஜிதியா வழங்கும் பரிந்துரையை மிகுந்த சிரத்தையுடன் பரிசீலிக்கப்போவதாக தொழிலாளர் அமைச்சகம் கூறியுள்ளது.