இங்கிலாந்திற்கு கல்வி கற்க வரும் ஐரோப்பிய ஒன்றியம் தவிர்த்த இதர நாட்டு மாணவர்கள், பகுதி நேர பணியில் ஈடுபடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இத்தகவலை இங்கிலாந்து அரசின் குடியேற்றத் துறை அமைச்சகர் டாமியன் கிரீன் வெளியிட்டுள்ளார்.
கல்வி விசாவில் இங்கிலாந்திற்கு படிக்க வரும் மாணவர்கள் இங்குள்ள பணி வாய்ப்புகளை பெறுவதால் உள்ளூர் தொழிலாளர்களுக்குத் தேவையற்ற நெருக்குதல் ஏற்படுகிறது என்று தடைக்கான காரணம் கூறியுள்ளார் டாமியன் கிரீன்.
இங்கிலாந்தில் கல்வி கற்க வரும் ஆசிய நாட்டு மாணவர்களே மிக அதிகமாக பகுதி நேர பணியாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.