Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய கப்பல்படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

இந்திய கப்பல்படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை
, வியாழன், 1 அக்டோபர் 2015 (21:01 IST)
இந்திய கப்பற்படையில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு  பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.

பயிற்சி காலத்தில் உதவிதொகையாக மாதம் ரூபாய் 21 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பட்டம் பெற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
காலியிடங்கள்: 70
 
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
 
1. சிவில் - 25
 
2. எலக்ட்ரிக்கல் - 10
 
3. மெக்கானிக்கல் - 10
 
4. எல்க்ட்ரானிக்ஸ் - 05
 
5. கம்ப்யூட்டர் சயின்ஸ், டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி, எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் - 10
 
6. எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிக்கேசன், டெலிகம்யூனிக்கேசன், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிக்கேசன்,  சேட்டிலைட் கம்யூனிக்கேசன் - 10
 
பயிற்சி காலம் - 1 வருடம்
 
உதவித்தொகை: மாதம் ரூ.21,000
 
தகுதி: பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
 
www.joinindianarmy.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.10.2015
 
மேலும்,விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையத்தை பார்க்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil